உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரியாவிடை: 'மதச்சார்பற்ற மனிதர் தான். ஆனால், அனைத்து மதங்களையும் நம்புகிறேன்:' பி.ஆர்.கவாய் உருக்கம்..!
BR Gavai farewell speech saying he believes in all religions
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய்க்கு டில்லியில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அவர், ''நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆன முதல் பௌத்த மதம் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதி பி.ஆர்.கவாய் ஆவார்.
அவரது தந்தை ஆர்.எஸ். கவாய், ஒரு அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். கவாய் 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின், 52-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் நவம்பர் 23 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். நாளையுடன் (நவம்பர் 21) உச்ச நீதிமன்றத்தில்அவரது பணி நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து அவருக்கு டில்லியில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

''நான் பௌத்த மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எந்த மத ஆய்வுகளிலும் எனக்கு ஆழமான அறிவு இல்லை. நான் உண்மையாக ஒரு மதச்சார்பற்ற மனிதர் தான். அதே வேளையில், இந்து, பௌத்தம் சீக்கியம், முஸ்லிம், கிறிஸ்துவம் உள்பட அனைத்து மதங்களையும் நம்புகிறேன்.
நான் உச்ச நீதிமன்றத்தில் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நான் இந்த நிலையை அடைந்தேன். கடந்த ஆறரை ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை செய்தேன்.

உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது, மாறாக அனைத்து நீதிபதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். முடிவுகள் என்னால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை, ஆனால், முழு நீதிமன்றத்திற்கும், விசாரணைகளுக்கும் முன்பாக வைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுகிறது'' என்று பேசியுள்ளார்.
English Summary
BR Gavai farewell speech saying he believes in all religions