தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சார்பாக, 05 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி; முன்பதிவு அவசியம்..!
05 days of wedding photography and video editing training through the Entrepreneurship Development Program
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பாக சென்னையில், 05 நாட்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 01.12.2025 முதல் 05.12.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், பாரம்பரிய புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், திருமண உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள், உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, திருமண புகைப்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது.?புகைப்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படுவதோடு,அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். 8668102600 / 9943685468 .
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
English Summary
05 days of wedding photography and video editing training through the Entrepreneurship Development Program