அடுத்தமாதத்தில் உயரப்போகும் TV விலை.! காரணம் இதோ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தொலைக்காட்சி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதன் உதிரி பாகங்களை பெரும்பாலும் இறக்குமதி தான் செய்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஒரு வருடத்திற்கு தொலைக்காட்சி உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதற்கான 5 சதவீத வரியை ரத்து செய்து உள்ளது.

கடந்த செப்டம்பரில் இந்த சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாதத்துடன் அந்த அறிவிப்பு காலாவதியாகிறது. மத்திய அரசு அறிவித்த இந்த வரிச்சலுகையை ஆல் தொலைக்காட்சி தயாரிப்பின் செலவு சற்று குறைந்துள்ளது இதனால் தொலைக்காட்சியின் விலையை குறைத்து அனைத்து தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த இந்த வரிச்சலுகை நடப்பு மாதத்தோடு நிறைவடைவதால் இந்தச்சலுகை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் மத்திய அரசு சார்பில் விடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தொலைக்காட்சிகளின் விலை உயரலாம் என அந்த நிறுவனங்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சலுகையை நீட்டிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விரும்பினாலும் அது குறித்த இறுதி முடிவினை நிதியமைச்சகம் தான் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரி விலக்கு அறிவிப்பு முடிவுக்கு வருவதால் 32 அங்குல தொலைக்காட்சிகளை காண உதிரிபாகங்கள் 34 டாலரில் இருந்து 60 டாலராக உயரக் கூடும். இதன் காரணமாக உற்பத்தி செலவுகள் அதிகமாகவே உயர்ந்து விட்டது மத்திய அரசு வரிச்சலுகை மேலும் நீட்டிக்காத பட்சத்தில் உற்பத்தி செலவுகளை சமாளிக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று தொலைக் காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருகின்றனர்.

ஆகவே தொலைக்காட்சியின் நிலையை குறைந்தபட்சம் 4% உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம். எடுத்துக் காட்டாக 32 அங்குல தொலைக்காட்சியின் விலை ரூபாய் 600 42 அங்குல தொலைக்காட்சியின் விலை ரூ 1500 முதல் 1600 வரை அதிகரிக்கலாம் என்றும் அந்த நிறுவனங்களின் சார்பில் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tv rate may hike from October month


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal