ஹைஃபை தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வெளியாகும் புதிய மொபைல்..!! - Seithipunal
Seithipunal


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போட்டி போட்டு கொண்டு புது புது தொழில்நுட்பங்களை புகுத்தி மொபைல் போன்களை வழங்கிவருகிறது. இந்த நிலையில் பிரபல நிறுவனமான ஓப்போ, ரெனோ 3ஏ என்ற பெயரில் புதிய தொழில்நுட்பம் கொண்ட மொபைல் ஒன்றை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே ஜப்பானில் இந்த மொபைல் விற்பனைக்கு வந்து விட்டது. இதைத்தொடர்ந்து இந்த மொபைல் இந்தியாவிலும் வெளியாகிறது. இப்படி  ஹைஃபையாக உருவாக்கப்பட்டுள்ள ரெனோ 3ஏ மொபைலின் சிறப்பு அம்சம் குறித்து பார்க்கலாம்.

ரெனோ 3ஏ சிறப்பம்சங்கள்:

மெமரி : 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி.  இன்பீல்டு மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

விலை : அதிகாரப்பூர்வமாக இந்த மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் ஜப்பானில் 39,800 யென்னிற்கு மொபைல் விற்கப்படுகிறது. அதன்படி இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 28,100  ஆகும்.

வண்ணம் : கருப்பு மற்றும் வெள்ளை என 2 வண்ணங்களில் வெளியாகும்.

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10 

சிம் வசதி : டூயல் நானோ சிம்

டிஸ்பிலே : 6.44 இன்ச் எச்.டி. அமோலெட் டிஸ்ப்ளே + கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பிராசஸர் : குவால்கம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி.  

கேமரா : நான்கு கேமிராக்களை கொண்டுள்ளது. பின்புறத்தில் 48MP sensor (f/1.7 aperture) + 8MP sensor (f/2.2 aperture) + 2MP sensor (f/2.4 aperture) + 2MP sensor (f/2.4 aperture) மற்றும் முன்புறத்தில் செல்ஃபிக்காக 16  மெகா பிக்சல் கொண்ட செகண்டரி காமிரா வசதியும் உள்ளது .

மைக்ரோ எஸ்.டி. மூலமாக 256 ஜி.பி. வரையில் இன்டர்னல் மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம். அதேபோல வைஃபை 802 டூயல் பேண்ட், ப்ளூடூத் வி.5.0, என்.எப்.சி., டைப் சி போர்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகிறது.

பேட்டரி : ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,025 ஆம்ப் திறன் கொண்டது.

மொத்த எடை : 175 கிராம்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reno 3 A Mobile


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->