வாட்ஸ்அப் அப்டேட் செய்துவிட்டீர்களா?.. இந்த அம்சம் மாஸ் காட்டுதுங்க.! - Seithipunal
Seithipunal


புதிய அப்டேட் :

தனது பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள வாட்ஸ்அப், ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் (Finger Print Lock) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் :

இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது. அனைத்து ஆன்ராய்டு மொபைல்களிலும் நிச்சயம் வாட்ஸ்அப் செயலி இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாட்ஸ்அப் மூலம் பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனமும் பல்வேறு புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகிறது.

காலையில் நாம் எழுவது முதல் இரவு படுக்க செல்லும் வரை வாட்ஸ்அப் இன்றி நாம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த செயலியை கொண்டு டெக்ஸ்ட், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் (Finger Print Lock)... எப்படி பெறுவது?

ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் வசதி உங்களுக்கு தேவையென்றால் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

அதன்பின்னர் Whatsapp Settings செல்ல வேண்டும்.

அதில் Account - privacy செல்ல வேண்டும்.

privacy பகுதியில் கடைசியாக Finger Print Lock வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் நீங்கள் Unlock with Finger Print என்ற வழிமுறைகளை பின்பற்றினால் நம் மொபைலில் பதிவு செய்துள்ள கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி ஒன்றிணைந்து விடும்.

மேலும் இந்த வசதியில் உடனடியாக, 1 நிமிடம், 30 நிமிடம் கழித்து லாக் ஆகும்படியும் விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செயலியைவிட்டு வெளிவந்த மறுகணமே வாட்ஸ்அப் லாக் ஆகிவிடும். மீண்டும் உங்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே வாட்ஸ்அப்பிற்குள் செல்ல முடியும்.

மேலும் இந்த வசதியில் உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. Finger Print Lock வசதிக்குள் சென்றால் Show content in notifications என்று இருக்கும்.

அதை on செய்தால் நோட்டிபிகேஷன் வாயிலாக வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வரும். ஆனால், குறுஞ்செய்தியை யார் அனுப்பினார்கள் என்பது நமக்கு காட்டாது. வாட்ஸ்அப் செயலிக்குள் சென்றால் மட்டுமே பார்க்க முடியும்.

ஃபிங்கர் பிரிண்ட் (Finger Print) இல்லாமல் லாக் நிலையில் இருந்தாலும் வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அம்சமான ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் (Finger Print Lock) வசதியின் மூலம் பயனாளரின் பிரைவஸி பாதுகாக்கப்படும் என வாட்ஸ்அப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finger Print Lock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->