இ-மெயில்களில் உள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகிறது.! எச்சரிக்கை செய்த கூகுள் .! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுகிறது என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்து.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 500 பேருக்கு இந்த எச்சரிக்கை தகவலை கூகுள் அனுப்பியுள்ளது.
 
அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயிரத்துக்கும் மேலான எச்சரிக்கை தகவலை  கூகுள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மர்ம நபர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து மெயில் அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அப்படி அனுப்பப்படும் மெயிலில் கடவுச்சொல் (பாஸ்வேடு) பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். அதை பார்ப்பவர்கள் தெரியாமல் தங்களது கடவுச்சொல்லை பயன்படுத்தினால், அடுத்த சில நொடிகளிலையே மெயிலில் ஊடுருவி அவர்களின் முக்கிய தகவல்களை திருடிவிடுகின்றனர்.

இதனால் அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்காக பிரத்தியேகமாக கூகுள், “உயர் பாதுகாப்பு திட்டம்” ஒன்றை உருவாக்கி உள்ளது. அதில் இணைத்து கொள்ளுமாறு அவர்களை கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதானால் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் உரிய முறையில் பாதுகாக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

emails hacked by hackers


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal