இந்தியா நடத்திய ராணுவ ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ இணைப்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தின் காரணமாக மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மேலும்,  எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது. 

மேலும், இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக அந்நாடு அண்மையில் ஏவுகணை சோதனையும் செய்தது. அதேபோல கடல்வழியாக இந்தியாவில் ஊடுருவ முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. 
   
இந்நிலையில், இந்தியாவும் தன் பங்குக்கு எதிர்நாட்டின் ராணுவ டாங்கிகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை DRDO நேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த சோதனை ஆனது ஆந்திர மாநிலம் கர்னூல் என்னும் இடத்தில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் இந்த 3-ம் தலைமுறை ஏவுகணைகளை ராணுவ வீரர் ஒருவர் மட்டுமே சுலபமாக கையாண்டு செயல்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த ஏவுகணை சோதனையை இந்தியா மூன்றாவது முறையாக வெற்றிகரமாக செய்துள்ளது. ஏவப்பட்ட ஏவுகணை இலக்கினை தாக்கி அழிக்கும் வீடியோ ஆனது வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DRDO successfully test-fires indigenous anti-tank missile for Army


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->