இனி டாக்டர்கிட்டபோயி காச வீணடிக்கவேண்டாம்! உடல்நலப் பிரச்சினைகளை போக்க வந்தாச்சு வாட்ஸ்அப் AI மருத்துவர் வசதி! - Seithipunal
Seithipunal


நம் தினசரி வாழ்க்கையில் , ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிரச்சனை ..அது மட்டுமில்லாமல் தல வலி,இடுப்பு வலி,கால் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பிஸியான வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க காலகட்டத்தில் டாக்டரை  நேரில் சென்று பார்ப்பது கடினம், வலியை போக்க வேற என்ன செய்வது? அதற்காக தான் அப்போ நம்ப போன்ல உள்ள வாட்ஸ்அப் புதிய தொழில்நுட்ப வசதியை கொண்டு வந்துள்ளது அதுதான் — AI மருத்துவர்.

இது நம் கைநுணியில் கிடைக்கும் ஒரு AI உதவியாளர், உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளை நமக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் நாம் அனைவரும் நம் அன்றாட விசயங்களில் தொடர்புகளை வைத்திருக்கிறோம்.

ஆனால் இப்போது, அதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. வாட்ஸ்அப் இப்போது உங்களுக்குத் தேவையான AI மருத்துவர் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், உங்கள் உடல்நலம் குறித்த கேள்விகளை டாக்டர்கள் கிட்ட போகி காச கரியாக்கமா போன்லே பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம். கற்பனை செய்யவே சுவாரசியமாக இருக்குல? உண்மையா இது உங்கள் வாழ்வில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.

இந்த சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிது. முதலில், 8738030604  என்ற எண்ணை உங்கள் வாட்ஸ்அப்பில் சேமித்து, AI மருத்துவர் என்று பெயரிடுங்கள். பிறகு வாட்ஸ்அப்பில் அவருக்கு ஒரு "Hi" என மெசேஜ் அனுப்புங்கள். உடனடியாக, AI மருத்துவர் உங்களைச் தொடர்புகொண்டு பதில் அளிப்பார்.  

அவர் உங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களைப் கேட்பார். பின்னர், உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும், எந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்குவார். உங்கள் உடல்நிலை தொடர்பான அறிகுறிகளை எழுத்தில் அனுப்பலாம், அல்லது கூடவே குரல் பதிவு மூலமாகவும் பகிரலாம்.

அதோடு, புகைப்படம் எடுத்து அனுப்பினால், உங்கள் உடல் தொடர்பான பிரச்சினைகளை குறைவதற்கான தீர்வுகளை உடனடியாக தருவார். உங்கள் உடல்நலப் பிரச்சினை தொடர்பான ஆய்வக அறிக்கைகள் இருந்தால், அவற்றையும் வாட்ஸ்அப்பில் அனுப்பலாம். அதைப் பரிசோதித்து, மேலும் விரிவான ஆலோசனைகளை AI மருத்துவர் தருவார்.  இந்த சேவையின் சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ்,இங்கிலீஸ் ,இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் AI மருத்துவரிடம் சாட் செய்து பேச முடியும்.

உங்களுக்கு விருப்பமான மொழியில் எளிதாக மருத்துவரிடம் உங்களது உடல்நலத்தை பகிர்ந்து கொள்ளலாம். உடனடியாக, அவரிடமிருந்து உங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள இந்த புதிய AI மருத்துவர் வசதி, நமக்கு தேவைப்படும் உடல்நல ஆலோசனைகளை விரைவாகவும் எளிதாகவும் தருகிறது.

எவ்வளவு வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து, மருத்துவ துறையில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது, இது நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும் ஒரு நுட்பம்! உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் இன்று இதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Don waste money going to the doctor anymore WhatsApp AI doctor facility to cure health problems


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->