செல்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? சரியான சார்ஜிங் முறையை தெரிந்துகொள்ளுங்கள்!இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!
Does your cell phone battery drain quickly Learn the correct charging method Donot make this mistake
சென்னை: நமது செல்போனில் சார்ஜ் விரைவாகக் குறைந்து விடுகிறது என்ற பிரச்சனை பலருக்கும் பொதுவானது. ஆனால் அதன் பின்னால் உள்ள உண்மையான காரணம் — பேட்டரியின் ஆயுள் குறைதல் மற்றும் தவறான சார்ஜிங் பழக்கம் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய காலத்தில் செல்போன் என்பது ஒரு நபரின் “ஆறாம் விரல்” போல் மாறிவிட்டது. அழைப்புகள், பேங்கிங், ஷாப்பிங், டிக்கெட் புக்கிங், கேம்கள் என அனைத்திற்கும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்துவதால் சார்ஜ் குறையும் வேகம் அதிகமாகிறது.
பேட்டரி ஏன் வீக் ஆகிறது? நிபுணர்கள் கூறுவது:
அதற்குக் காரணம் நாம் சார்ஜ் செய்வது எப்படி என்ற விஷயமே. சிலர் இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் செய்யும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். 100% சார்ஜ் ஆன பிறகும், போனை சார்ஜ் நிலையில் விடுவது பெரும்பாலும் பேட்டரிக்குள் வெப்பத்தையும் அழுத்தத்தையும் உருவாக்கும். இதுவே நீண்டகாலத்தில் பேட்டரியின் செயல்திறனை குறைக்கும் முக்கிய காரணமாகும்.
பேட்டரிக்கு சரியான அளவு சார்ஜ் எவ்வளவு?
நிபுணர்கள் கூறுவதாவது — செல்போனை 20% முதல் 80% வரை சார்ஜ் வைத்திருக்க வேண்டும். இதை விட குறைவாகவோ, அதிகமாகவோ வைத்தால் பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படும். பல புதிய போன்களில் 80% அல்லது 90% வரை சார்ஜ் ஆனதும் தானாக நிறுத்தும் வசதி (Battery Protection Mode) இருக்கிறது. இதைச் செயல்படுத்தி வைத்தால் பேட்டரி நீண்ட நாள் நீடிக்கும்.
மேலும், சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும். வெப்பமான இடங்களில் போனை சார்ஜ் செய்யாதீர்கள். போன் வெப்பமடைந்தால் உடனே சார்ஜ் நிறுத்துங்கள்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், பேட்டரியின் செயல்திறன் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், அடிக்கடி பேட்டரி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Does your cell phone battery drain quickly Learn the correct charging method Donot make this mistake