கார் பிரியர்கள் குஷி! சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் இந்தியாவில் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


சிட்ரோயன் நிறுவனம் தனது  C3 ஆட்டோமேடிக் வெர்ஷனின்  விலை விவரங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய ஆட்டோமேடிக் மாடல், டாப்-எண்ட் ஷைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 10.27 லட்சம் வரை, எக்ஸ்-ஷோரூம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் உள்ள முக்கிய அம்சங்கள்: எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்  உள்ளது. எலக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள் ,ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் ,7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ,10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் ,ஆறு ஏர்பேக் ஆகியவை அடங்கும்.

சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது, இது 110 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

விலை விவரங்கள்:  
C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் ரூ. 10 லட்சத்துக்கும் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் வைப் பேக் ரூ. 10.12 லட்சத்துக்கும் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 10.27 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car lovers are happy Citroen C3 Automatic launched in India


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->