சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! தப்பி தவறிக்கூட செய்யக்கூடாது! - Seithipunal
Seithipunal


சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோர்ட்டில் ஊடகங்கள் செயல்படுவதற்கான கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை:அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே ஊடகங்கள் பேட்டி எடுக்கவும், நேரலை செய்யவும் முடியும்.உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளில் புகைப்படம் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேமரா, செல்ஃபி ஸ்டிக் போன்ற உபகரணங்களை கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட ஊடக நிருபர்களுக்கு ஒரு மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் நுழைவு தடை விதிக்கப்படும்.

கோர்ட் ஊழியர்கள் இந்த விதிகளை மீறினால், அவர்கள்மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் அதிகாரம், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுப்ரீம் கோர்ட்டின் பாதுகாப்பு வலுவடைவதுடன், ஊடகங்களின் செயல்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New restrictions for the media inside the Supreme Court complex No escape is allowed


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->