பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்கும் ஐ.நா. தீர்மானதிற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா! அதிர்ச்சியில் இஸ்ரேல்!
India votes in favor of UN resolution declaring Palestine an independent state Israel in shock
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்குத் தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் மட்டுமே எதிராகவும் வாக்களித்தன. மேலும் 12 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகின.
முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதைத் தவிர்த்து வந்த இந்தியா, இந்த முறை பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் நோக்கில் ஆதரவாக வாக்களித்தது. இந்த முடிவு, இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பல தசாப்தங்களாக இந்தியா “இரு நாடுகள் தீர்வு” என்ற கொள்கையை ஆதரித்து வந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீப ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு நெருக்கமான அணுகுமுறையையே பின்பற்றி வந்தது.அந்நிலையில், தற்போது இந்தியா எடுத்துள்ள வாக்கு, பாலஸ்தீனுக்கு வலுவான ஆதரவு எனக் கருதப்படுகிறது.
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான இரு-நாடு தீர்வை அமல்படுத்த வேண்டும்.காசா போரைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் கூட்டு முயற்சிகள் அவசியம்.2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை கண்டிக்கிறது.
ஹமாஸ், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, காசா மேலாண்மையை கைவிட்டு, ஆயுதங்களை பாலஸ்தீன அதிகார சபைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஐ.நா. வெளியிட்ட தரவின்படி, 2023 முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 64,750 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
மேலும், இஸ்ரேல் விதித்த பட்டினி மற்றும் தடைகள் காரணமாக கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வாக்கு, வரவிருக்கும் சர்வதேச உறவுகளில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. அதேசமயம், இஸ்ரேலுடனான தொடர்பு எவ்வாறு முன்னேறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
India votes in favor of UN resolution declaring Palestine an independent state Israel in shock