“வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால் மக்கள் வீதிகளில் இறங்குவார்கள்” – அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை
If vote theft is not stopped people will take to the streets warns Akilesh Yadav
லக்னோ: பாராளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டின் மூலம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் அமிலேஷ் யாதவ், தேர்தல் முறைகேடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:“நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர்கள் மிரட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
இன்று சமூக வலைதளங்கள் வழியாக இளைஞர்கள் விழிப்புடன் இருக்கின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகள் சமூக வலைதளங்களின் மூலமாகவே எழுந்துள்ளன.
வாக்குத் திருட்டை தடுக்குவது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை. ஆனால் இதனை தடுக்க தவறினால், நம் அண்டை நாடுகளில் நடந்தது போல நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட நேரிடும்,” என அவர் எச்சரித்தார்.
அமிலேஷ் யாதவின் இந்தக் கருத்துக்கள், வரவிருக்கும் தேர்தல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் வகையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
English Summary
If vote theft is not stopped people will take to the streets warns Akilesh Yadav