இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா- ரஜினி, கமல் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர், இசைஞானி இளையராஜா, திரைப்பட உலகில் நுழைந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த அவர், தமிழ் சினிமாவின் வரலாற்றில் முன்னணியில் திகழ்கிறார்.

இசைக்கான இவரது பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய அரசு பல்வேறு விருதுகள் வழங்கியதோடு, மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் லண்டனில் “வேலியண்ட் சிம்பொனி”யை அரங்கேற்றி உலக இசை உலகில் தனித்துவ சாதனையை படைத்திருந்தார்.

இளையராஜாவின் பொன்விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெறுகிறது.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.சிறப்பு விருந்தினர்களாக, திரையுலகின் இரு உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (எம்.பி.) பங்கேற்கின்றனர்.பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, இளையராஜாவை வாழ்த்த உரையாற்றுகின்றனர்.

இளையராஜா பொன்விழாவை முன்னிட்டு, வெளிநாட்டு இசைக்கலைஞர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி முக்கிய அம்சமாக இடம்பெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A felicitation ceremony for musician Ilayaraja will be held today at the Nehru Indoor Stadium in Chennai on behalf of the government Rajinikanth and Kamal will participate


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->