ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம்: எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கிறது?- வெளியான புதிய தகவல்கள்!
GST Tax Reform Which items will see their prices increase New information released
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்த “இரட்டை தீபாவளி” வாக்குறுதி, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், தற்போதைய 5, 12, 18, 28 சதவீத வரி விகிதங்கள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என இரட்டை அடுக்குகளாக மாற்றம் செய்யப்பட்டது.
விலை குறையும் பொருட்கள்
28% ஜி.எஸ்.டி. இருந்த பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், கார்கள் → தற்போது 18% க்கு குறைப்பு.
12% ஜி.எஸ்.டி. இருந்த பொருட்கள் → 5% க்கு குறைப்பு.
ஸ்டேஷனரி பொருட்கள் (பென்சில், ரப்பர்), மருத்துவ காப்பீடு → முழுமையாக வரி ரத்து.
வரி அதிகரிப்பு செய்யப்பட்ட பொருட்கள்
நெய்து மற்றும் நெசவு ஆடைகள், குயில்ட் மெத்தைகள் (₹2,500 மேல்) → 12% இருந்து 18%.
கம்பளி → 12% இருந்து 18%.
நிலக்கரி, லிக்னைட் → 5% இருந்து 18%.
பான்மசாலா, சிகரெட், புகையிலை பொருட்கள், கார்பனேட்டு பானங்கள், பழச்சாறுகள் → 28% இருந்து 40%.
கேசினோ, சூதாட்டம், ரேஸ் கிளப்புகள், ஆன்லைன் விளையாட்டுகள், IPL போட்டிகள் → 28% இருந்து 40%.
சேவைகளில் மாற்றம்
விமானப் பயணம் (பிசினஸ் கிளாஸ், முதல் வகுப்பு) – 12% → 18%.
வாடகை கார்கள், தனியார் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து சேவைகள் – 12% → 18%.
பைப் லைன் வழியாக எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்து – 12% → 18%.
ரெயில் கன்டெய்னர் போக்குவரத்து (ரெயில்வே தவிர்ந்த சேவைகள்) – 12% → 18%.
இந்த மாற்றம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெரும்பாலான மின்சாதனங்கள் மற்றும் உபயோகப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், சேவைத் துறைகளில் வரி உயர்வு காரணமாக போக்குவரத்து, விமானக் கட்டணங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக சந்தையில் பொருட்களின் விலைகள் உயரும் சாத்தியம் உள்ளது.
English Summary
GST Tax Reform Which items will see their prices increase New information released