ஐயோ! தாயின் கண்டனத்துக்கு பின் நடந்த துயர சம்பவம்...!!! பிளஸ்-2 மாணவி எடுத்த திடுக்கிடும் முடிவு...! - Seithipunal
Seithipunal


தேனி கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், 8 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் மனைவி பிரியா, 2 மகள்களான யோகஸ்ரீ (17), பானுஸ்ரீ ஆகியோருடன் பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் வசித்து, கூலித்தொழிலால் வாழ்க்கை நடத்தி வந்தார். இதில் மூத்த மகள் யோகஸ்ரீ பிளஸ்-2 மாணவி.

இதனிடையே,நேற்று முன்தினம் மாலை, பிரியா வீட்டை விட்டு உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் செல்லும்போது, செல்போன் மற்றும் ரூ.500-ஐ யோகஸ்ரீக்கு பாதுகாப்பாக கொடுத்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அவர், பணம் மற்றும் போனை கேட்டபோது, யோகஸ்ரீ தெளிவாக பதில் அளிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த பிரியா மகளிடம் கண்டித்துவிட்டு வெளியேறினார்.அந்த நேரத்தில் மனஉளைச்சலுக்கு ஆளான யோகஸ்ரீ, வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்குப்போட்டு தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றார். பின்னர் வீடு திரும்பிய பிரியா, மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார்.

அங்குள்ள அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யோகஸ்ரீயை உடனே தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக பிரியா அளித்த புகாரின் பேரில், தேனி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினேகா தற்கொலை தடுப்பு மையத்தை +91 44 2464 0050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். தேசிய ஆதரவுக்கு இந்தியா தற்கொலை உதவி எண் கோப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragic incident that happened after mothers condemnation shocking decision taken by Plus 2 student


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->