கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் லாரி பாய்ந்த விபத்து : 8 பேர் பலி, 25 பேர் காயம்
Truck hits Ganesh procession in Karnataka 8 dead 25 injured
கர்நாடக மாநிலம் வரசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீரென லாரி ஒன்று புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
முதல் தகவலின்படி, ஒரு பைக் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது, லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர்மீடியனை தாண்டி, ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள்மீது வேகமாக பாய்ந்தது.
இந்த கொடூர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு ஆளானனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், இறந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இதேவேளை, இந்த விபத்து தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Truck hits Ganesh procession in Karnataka 8 dead 25 injured