சோமோட்டோ, ஸ்விகிக்கு ஆப்பு வைக்கும் ஜாரோஸ் செயலி- நாமக்கல்லில் புதிய உதயம்.!!
zaaroz mobile app launch in namakkal
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் சோமோட்டோ, ஸ்விகி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பதிலாக ஹோட்டல் உரிமையாளர்களே சேர்ந்து புதிய உணவு டெலிவரி செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஹோட்டல்கள், பிரியாணி கடைகள் என்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களிடையே கமிஷன் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. அதாவது, விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வரும் லாபத்தில் 50% பாதிப்பு ஏற்படுவதாக நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் குரல் எழுப்பி வந்தனர்.
மேலும், பிரச்சனைகளை தீர்க்கக்கோரி சம்பந்தப்பட்ட சோமோட்டோ, ஸ்விகி நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் சோமோட்டோ, ஸ்விகி டெலிவரி நிறுவனங்களுக்கு உணவு வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சோமோட்டோ, ஸ்விகி போன்ற செயலிகளுக்கு பதிலாக ZAAROZ (ஜாரோஸ்) என்ற பெயரில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து ஐம்பதுக்கு மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
English Summary
zaaroz mobile app launch in namakkal