தீம் இசையின் அரசன்.. யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 1997 ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த யுவன் பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளார்.  இளைஞர்கள் மத்தியில் யுவனின் இசைக்கென தனி மவுசு உண்டு. தனிமை, காதல், சோகம், மகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளுக்கும் யுவனின் இசை உண்டு.

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது இசை பயணத்தை பாராட்டும் வகையில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்  வழங்க உள்ளனர்.

இதற்கிடையில், மத்திய ராணுவத்திற்கு எடை குறைவான அர்ஜுன் ராணுவ டேங்க்கை வடிவமைத்த சாதனை விஞ்ஞானி  டாக்டர் வி. பாலகுருவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் 2666 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yuvan Get honorary doctorate from sathyabama Institute


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->