ஊருக்குள் வந்த காட்டு யானை! விரட்டி சென்ற இளைஞர்! தூக்கிப்போட்டு மிதித்து கொன்ற யானை!
youth was killed in an elephant attack near Coimbatore
கோவை அருகே யானை தாக்கியத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று சுற்றி தெரிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்தனர்.
மக்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானை சுற்றிதிரிவது தொடர்பாக பூலாம்பட்டி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
பின்னர் மீண்டும் காட்டு யானை ஒன்றும் இரவு 10 மணி அளவில் ஆக்ரோஷமாக கத்தியப்படி ஊர் தெருக்களில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வனத்துறையினர் யாரும் காட்டு யானை அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
வனத்துறையின் எச்சரிக்கையை கேட்காமல் விராலியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் இவருடைய நண்பர் ஹரிஷ் ஆகிய இருவரும் குடியிருப்பு பகுதியில் வந்த ஒற்றை காட்டு யானையை விரட்ட பின்னாடியே ஓடி சென்றுள்ளனர். ஆக்ரோஷத்தில் இருந்த காட்டு யானை இவர்களை பார்த்து திரும்பித் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
யானை துரத்தியதில் தடுமாறி கீழே விழுந்த கார்த்திகை யானை தூக்கி வீசி மிதித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth was killed in an elephant attack near Coimbatore