கடலூரில் பரபரப்பு - திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


கடலூரில் பரபரப்பு - திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை.!!

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே வாலி சோதனைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். விவசாயம் செய்து வந்த இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. இதனால், அவர் வீட்டில் தனது பெற்றோரிடம் தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைங்கள் என்று பலமுறை கேட்டுள்ளார். 

இந்த நிலையில் குமரன் தனக்கு வரன் பார்க்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கடுமையான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த குமரன் திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குமரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து வந்து குமரனின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் திருமணமாகாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth sucide for not marriage in cuddalore


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->