வெள்ளம் புரண்ட ஆற்றில் டைவ் அடித்த இளைஞர், சடலமாக மீட்பு..!
Youth Drowns in To river Near Dharmapuri
ஆற்றில் டைவ் அடித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேடு பகுதியில் தென்னைபண்ணை ஆற்று ஓடுகிறது. இந்த ஆற்றில் அந்த பகுதி மக்கள் நீராடுவதற்க்காக வருவர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த அரவிந்த் என்பவர் நண்பரின் தந்தை ஈமசடங்கிற்காக ஆற்று பகுதிக்கு வந்துள்ளார். கிருஷ்ணகிரி ஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
இந்நிலையில், அந்த ஆற்றில் குளிப்பதற்காக அரவிந்த் இரண்டு முறை டைவ் அடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆர்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தீயணைப்புதுறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவரை தேடினர். நீண்ட தேடுதலுக்கு பின் அவரது சடலம் கரை ஒதுங்கியது. அவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Drowns in To river Near Dharmapuri