ராமநாதபுரம் அருகே பரபரப்பு.! 7 வயது சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழு வயது சிறுமியை வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர் ஏழு வயது சிறுமி. இவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த கீழக்கரை பகுதியை சேர்ந்த முனியசாமி (24) என்பவர் சிறுமியின் வாயை பொத்தி கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் பயந்துபோன முனியசாமி சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தொண்டி போலீசார், முனியசாமியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முனியசாமியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணையின் நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for tried to kidnap 7 year old girl in ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->