மது வாங்கி தர மறுத்த கூலித்தொழிலாளி.! பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மது வாங்கித்தர மறுத்த கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர், செங்கல் வராயன் தெரு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிரபு (30). இவர் நேற்று பெரிய குப்பம், கற்குழாய் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். 

அப்பொழுது கற்குழாய் சாலைப் பகுதியில் சைக்கிள் ஸ்டேண்ட் நடத்தி வரும் லாரன்ஸ் என்கிற அரவிந்த்(34) என்பவர் பிரபுவை மடக்கி மது வாங்கித்தர கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கு பணம் இல்லை என்று பிரபு கூறியதால் தகாத வார்த்தைகளால் பேசிய லாரன்ஸ் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பிரபுவை அடித்துள்ளார். 

மேலும் பிரபு கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தை, இது திருட்டு வாகனம் என்னிடம் கொடுத்து விட்டு ஓடிவிடு, இல்லையென்றால் அடித்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதையடுத்து பிரபு இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், லாரன்சை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for hitting a laborer with a beer bottle who refused to buy alcohol in tiruvallur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->