காவல் நிலையத்தில் காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி விஷம் அருந்திய வாலிபர்...! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாவட்டம் கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கீர்த்திவாசன் என்பவர்,ஒரு பெண்ணை சில காலமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்த நிலையில், கீர்த்திவாசனின் நடவடிக்கை நாளடைவில் பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனிடையே,அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதை அறிந்த கீர்த்திவாசன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததோடு, கடும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தவுடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் காவல் நிலையத்தில் முறையிட்டார்.இதைத் தொடர்ந்து கீர்த்திவாசனை அழைத்து காவலர்கள் விசாரணை நடத்தியபோது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனிடையே காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து அருந்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு,அதிர்ச்சியான காவலர்கள் தாமதிக்காமல்  உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man drank poison police station demand that girlfriend with him


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->