வெளியானது யோகி பாபுவின் சன்னிதானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!
sannithanam p o movie first look poster released
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகி பாபு தற்போது, ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மான்கராத்தே, பட்டத்து யானை, பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா என்று பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இயக்குனர் அமுத சாரதி இயக்கத்தில் ‘சன்னிதானம் பி.ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ரூபேஷ் ரெட்டி, சித்தாரா, கஜராஜ், மேனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தினை மது ராவ்,விவேகநாந்தன் மற்றும் சபிர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படம் ஒரு கிராமத்து பின்னணியை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், யோகி பாபு நடித்துவரும் ‘சன்னிதானம் பி.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
English Summary
sannithanam p o movie first look poster released