நான் ஆட்சிக்கு வந்தவுடன் அறிவாலயத்தை தரைமட்டமாக்குவேன்.!பரபரப்பை கிளப்பிய சீமான்!
As soon as I come to power I will raze the knowledge center to the ground The man who caused a stir
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் "எது நமக்கான அரசியல்" என்ற தலைப்பில் இந்திய தேசிய லீக் கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு திமுக, பாஜக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
சிறுபான்மை மக்களின் 15% வாக்குகளை நம்பி திமுக ஆட்சியமைத்ததாக அவர் கூறினார்.“அந்த வாக்குகளை வைத்து ஆட்சி அமைத்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அடுத்த முறை அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள், அப்போதுதான் அவர்கள் உங்கள் வழியில் வருவார்கள்” என்று சீமான் வலியுறுத்தினார்.
அவர் மேலும், திமுகவை எதிர்க்கும் யாரையும் “பாஜக B டீம்” என குற்றம் சாட்டும் பழக்கத்தை கண்டித்தார்.“உண்மையில் பாஜகவின் A டீம் திமுகதான். ஆனால் எங்களை B டீம் என்கிறார்கள். பாஜகவும், திமுகவும் இருவரும் வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு” எனக் குறிப்பிட்டார்.
மோடி – திமுக உறவைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார்.“பிரதமர் மோடி 75 வயதுக்கு பின் பதவி விலகும் அழுத்தத்தில் உள்ளார். பிரச்சினை வந்தால் திமுகவின் 22 சீட்டுகள் உதவும் என அவர் நம்புகிறார். அதனால் தான் தமிழ்நாட்டுக்கு வந்தும் திமுக பற்றி விமர்சிக்கவில்லை” என்றார்.
மேலும், தனது கொள்கைகளை தமிழக வெற்றி கழகம் தமக்கென எடுத்துக்கொண்டதாக குற்றம் சாட்டிய சீமான், பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள அந்தக் கட்சியை விமர்சித்தார்.“தமிழ் அழிய வேண்டும் என பேசிய பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டதால் நான் விஜயை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
அத்துடன், வக்பு வாரிய சொத்துகளில் உள்ள கட்டிடங்களை ஆட்சிக்கு வந்தால் தரைமட்டம் ஆக்குவேன் என்றும், மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றுவேன் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.
சீமான் உரை, திமுக மற்றும் பாஜக தொடர்பான அரசியல் சூழலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
As soon as I come to power I will raze the knowledge center to the ground The man who caused a stir