மனநலம் பாதிப்பா? நடிகை மீரா மிதுன் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


மீராமிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

இந்த புகார் குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த  வழக்கு விசாரணையின் போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாததால் கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் பி டெல்லி போலீசார் மூலம் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 'மீராமிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர முடியவில்லை.  அவரது உடல்நலம் சீரானதும் சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம்' என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is mental health affected? Actress Meera Mithun admitted to the hospital


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->