"ஒருத்தனுக்கு ஒருத்தினு" அப்படி இருந்தா தான் வைரமுத்துக்கு பிடிக்காதே! - ராமர் குறித்து சர்ச்சை கருத்து!விளாசிய தமிழிசை!
One for one If that the case Vairamuthu wouldnot like it Controversial comment on Rama Tamil song that went viral
சென்னை:
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பேசத் தொடங்கும் முன், “அனைவரும் கைத்தட்டுங்கள், நான் பேசப்போகிறேன்” எனக் கேட்டுக் கொண்டு தனது உரையை ஆரம்பித்த அவர், இந்து மத கடவுள்களில் ஒருவரான இராமர் குறித்து “புத்தி சுவாதீனம் இல்லாதவர்” என்ற தொணியில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த கருத்து இந்து மதத்தைச் சேர்ந்த பலர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. “வெறும் கைதட்டலுக்காக குறிப்பிட்ட மதத்தவரின் கடவுளை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.“கடவுள் ராமர் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர். அப்படி வாழ்ந்தால் தான் கவிஞருக்கு பிடிக்காதே. ராமாயணத்திற்கோ ராமருக்கோ புதிதாக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடலாம், ஆனால் தவறாக எடுத்துரைக்காதீர்கள்,” என தமிழிசை கூறினார்.
அவரது உரையில், ராகுல் காந்தி கைது விவகாரம் குறித்தும் தமிழிசை கருத்து தெரிவித்தார்.“தேர்தல் ஆணையம் குறித்து பொய் பேசியது, அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது ஆகிய காரணங்களால் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். இதை ஏதோ தியாகியை கைது செய்தது போல பேச வேண்டாம்,” என்றார்.
இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
One for one If that the case Vairamuthu wouldnot like it Controversial comment on Rama Tamil song that went viral