நடிகர் அபினய்க்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர் தனுஷ்.!!
actor dhanush five lakhs money provide to actor abinai
உடல்நலக் குறைவால் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய்க்கு பிரபல நடிகர் தனுஷ் ஐந்து லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் அபினய். நடிப்பதுடன் விஜய்யின் 'துப்பாக்கி' திரைப்படத்தில் நடித்த வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார்.
ஒருகட்டத்தில் நடிகர் அபினய்க்கு படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டார். இதற்கிடையே நடிகர் அபினய் சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததுடன், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். இதையறிந்த சின்னத்திரை நடிகர் பாலா, நடிகர் அபினய்யை அவரது வீட்டில் சந்தித்து மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சம் நிதியுதவியாக வழங்கினார்.
இது தொடர்பான வீடியோவில் நடிகர் அபிநய் கண்கலங்கி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து எலும்பும், தோலுமாய் இருக்கும் நடிகர் அபிநய்க்கு திரையிலகினர் உதவ முன்வர வேண்டும் என்று ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அபிநய்யின் மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
English Summary
actor dhanush five lakhs money provide to actor abinai