நீட் தேர்வு தோல்வி மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை...!
student who depressed after failing NEET exam committed suicide
சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவை சேர்ந்த ஹரிஷ் குமார் என்பவர் தி.நகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில்,மூத்த மகள் 'சஞ்சி ஸ்ரீ' மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

இதை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு அக்காவை பார்த்து 2-வது மகள் 'மதன ஸ்ரீ'யும்மருத்துவ படிப்பு படிக்க விரும்பினார்.இதற்காக அவர் நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானபோது குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்திருந்தார்.
இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலிலிருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 .30 மணியளவில் வீட்டின் மாடியிலுள்ள அறைக்கு சென்று மதன ஸ்ரீ தூக்குப்போட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிட்டியதும் கொடுங்கையூர் காவலர்கள் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், நீட் தேர்வால் மாணவிகள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சென்னை கொடுங்கையூரிலும் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவ்வப்போது இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் இதுபோன்று செய்வதால் கவலை நிலவுகிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
student who depressed after failing NEET exam committed suicide