தமிழகம்: கல்லூரி மாணவியை பாலியல் வகொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர் கைது!
namakkal SSI Arrested for College girl abuse case
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்குமார் (55) மீது, பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மோகன்குமார் கடந்த ஆறு ஆண்டுகளாக கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
அந்த காவல் நிலையத்தில் சமையலராக பணியாற்றும் ஒருவரின் மகள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த மாதம் 6ஆம் தேதி, மோகன்குமார் பணிநிமித்தமாக ராசிபுரம் நோக்கி காரில் புறப்பட்டபோது, மாணவியை ராசிபுரம் வரை அழைத்து செல்லத் தயாராக இருப்பதாக கூறினார்.
இதையடுத்து மாணவியும், அவரது தந்தையும் காரில் ஏறினர். கொல்லிமலை அடிவார முள்ளுக்குறிச்சி பகுதியில் சமையலர் இறங்கிய பிறகு, மாணவி மட்டும் மோகன்குமாருடன் பயணம் தொடர்ந்தார்.
அந்த நேரத்தில், மோகன்குமார் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்து, இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், குற்றச்சாட்டு உண்மை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் இன்று மோகன்குமாரை கைது செய்தனர்.
English Summary
namakkal SSI Arrested for College girl abuse case