பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!
America Balochistan vs Pakistan
சீனாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணமாகக் கொண்டு, அமெரிக்கா இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஒருபுறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, மறுபுறம் பாகிஸ்தானுடன் நட்பு அணுகுமுறையை காட்டி வருகிறது.
இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானில் செயல்படும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் வேளையில் வெளிவந்த இந்த அறிவிப்பு, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவாகக் கருதப்படுகிறது.
English Summary
America Balochistan vs Pakistan