பாலிவுட்டில் நான் வெறும் ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறேன்...! - வருத்தம் தெரிவித்த பூஜா ஹெக்டே
I am seen just object in Bollywood Pooja Hegde expresses regret
பிரபல நடிகை ''பூஜா ஹெக்டே'' தற்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி என்ற திரைப்படத்தில் ''மோனிகா'' என்ற பாடலுக்கு நடமாடியுள்ளார். இப்பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்று வைரலாகி தற்போது ட்ரெண்டில் இருக்கிறது.

அண்மையில் இதுகுறித்த நடந்த நேர்காணல் ஒன்றில் பூஜா தெரிவித்ததாவது,"என்னை கூலி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட லோகேஷ் அழைத்த போது, அது படத்துடைய வியாபாரத்தை பெரிது படுத்தும் என அவர் என்னை மதித்து அழைத்ததற்கு நன்றி. மேலும் அப்பாடலின் நடனமாடுவது மிகவும் கடினமாக இருந்தது" என்றார்.
இதில் மற்றொரு கேள்விக்கு அவர் " இந்தி சினிமாத்துறையில் என்னை வெறும் அழகு சேர்க்கும் கதாப்பாத்திரங்களுக்காகவே படத்தில் கமிட் செய்கின்றனர். நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததை அவர்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
நான் இந்த இடத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னை ரெட்ரோ படத்தில் ருக்மிணி என்ற கதாப்பாத்திரமாக மாற்றினார். அவர் என் நடிப்பு ஆற்றலை நம்பினார்" என்று தெரிவித்தார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
I am seen just object in Bollywood Pooja Hegde expresses regret