இளைஞர்களுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸ் பைக் வந்தாச்சு!பல்வேறு அம்சங்களுடன் விற்பனையை தொடக்கிய கேடிஎம் பைக்! - Seithipunal
Seithipunal


இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனம் தனது புதிய 160 டியூக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த 160சிசி எஞ்சின், ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் நவீன அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமான இந்த பைக்கிற்கு 10 ஆண்டுகள் உத்தரவாதம் மற்றும் பல்வேறு நிதி திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 12 முதல் டீலர்களிடம் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 200 டியூக்கிற்கு கீழ் இடம்பிடிக்கும் இந்த மாடல், பஜாஜ் பல்சர் NS160, யமஹா MT-15 V2.0, TVS அபாச்சி RTR 200 4V போன்ற பைக்குகளுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

கேடிஎம் 160 டியூக், சிக்னேச்சர் LED ஹெட்லாம்ப், அகலமான எரிபொருள் டேங்க், ஸ்லீக் டெயில் மற்றும் LED டெயில் லைட் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. ஆரஞ்சு-பிளாக் மற்றும் நீலம்-வெள்ளை (ஆரஞ்சு ஹைலைட்ஸ்) நிறங்களில் கிடைக்கும். 5 அங்குல LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன், கால் ரிசீவ் மற்றும் மியூசிக் பிளே வசதி போன்ற அம்சங்களும் உள்ளன.

200 டியூக் பிளாட்ஃபார்மில் இருந்து பெறப்பட்ட 160சிசி லிக்விட் கூல்ட் எஞ்சின் 18.74 பிஎச்பி பவரையும் 15.5 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. முன்புறத்தில் USD ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன், 320 மிமீ முன் டிஸ்க் மற்றும் 230 மிமீ பின் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

நிறுவனம் தெரிவித்ததாவது, சிறந்த விலை மற்றும் உயர்தர அம்சங்களுடன் 160 டியூக், இந்திய 160சிசி ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் புதிய வரலாற்றை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The youth favorite sports bike has arrived KTM bike launched with various features


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->