உயிரோடு இருக்கீங்களா? மேயர் பிரியா வராங்க! செய்தி வாசிப்பாளராட்டும் பேசிட்டு போறாங்க! ஷனம் ஷெட்டி ஆவேசம்!
Are you alive Mayor Priya is coming Even the newsreader is talking Shanam Shetty is obsessed
சென்னை: சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு நடிகை ஷனம் ஷெட்டி ஆவேசமாக குரல் கொடுத்தார். "மேயர் பிரியா வராங்க, செய்தி வாசிப்பாளர் மாதிரி தகவல் சொல்லிட்டு போறாங்க, ஆனா தீர்வு மட்டும் கிடைக்கலை" என அவர் கடுமையாக விமர்சித்தார்.
ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட 5 மற்றும் 6-ஆம் மண்டலங்களில் குப்பை அகற்றுதல், சாலைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதால், மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிய சுமார் 2,000 பேர், அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக, பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் ரிப்பன் மாளிகை முன்பு பந்தல்கள் அமைத்து இரவு பகலாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 11-ஆம் நாளாகும்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஷனம் ஷெட்டி, “கொரோனா காலத்தில் உயிர் ஆபத்தில் இருந்தபோதும், குடும்பத்தை விட்டு நமக்காக தெரு தெருவாக சுத்தம் செய்தவர்கள் இவர்கள். பணி நிரந்தரம் செய்வோம் என்று நீங்கள் (அரசு) கொடுத்த வாக்குறுதியைத்தான் கேட்கிறார்கள். அதை காப்பாற்ற முடியாத அரசாங்கத்திடம் மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால், அரசாங்கம் இருந்தும் இல்லாவிட்டும் வேறுபாடு என்ன? இனிமேல் ஓட்டு கேட்டு எப்படிச் செல்வீர்கள்?” என்று அவர் சாடினார்.
இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் குடிநீர் பாட்டில்களுடன் வந்து உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Are you alive Mayor Priya is coming Even the newsreader is talking Shanam Shetty is obsessed