மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற வாலிபர்..அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வாலிபர் மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள லோனாரா பகுதியில் வசித்து வருபவர் அமித் பும்ரா யாதவ் . இவர் கடந்த 9-ந்தேதி மனைவி கியார்ஷியுடன் மோட்டார் சைக்கிளில் மத்திய பிரதேசம் மாநிலம் சியோனியில் உள்ள சொந்த ஊரான கரன்பூருக்கு சென்றுள்ளார்.

அப்போது நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் மீது  லாரி  மோதியது. இதில் பின்னால் இருந்த கியார்ஷி தவறி விழுந்து  மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் விபத்து நடந்த பகுதி வனப்பகுதியில் இருந்ததால்  வாலிபர் உதவி கேட்டு அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தினார். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தி உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த வாலிபர், மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி கொண்டு வீட்டுக்கு எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.


இந்தநிலையில்தான்  நாக்பூர் குமாரி சுங்கச்சாவடி அருகில் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமித் பும்ரா யாதவ் மனைவி  உடலை கட்டி வைத்து சர்வசாதாரணமாக சென்று கொண்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாக்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடிவருகின்றனர். இதற்கிடையே வாலிபர் மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்து வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man carries wifes body on bike Shocking incident


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->