துக்கச்செய்தி ! ஷட்டில் கார்க்கை எடுக்க முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி...!
Sad news 14yearold boy electrocuted while trying remove shuttlecock
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர்வீட்டுக்கு சென்ற சிறுவன்,பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மீது ஷட்டில் கார்க் விழுந்துள்ளது.
அந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சி செய்தபோது 10 வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினான்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பெற்றோர், உறவினர் என அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில்,ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வரும் ''விஜய் கார்த்திக்'' என்பதும், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
English Summary
Sad news 14yearold boy electrocuted while trying remove shuttlecock