கிருஷ்ணகிரி : மனைவியுடன் தகராறு.! தூக்கில் தொங்கிய தர்மபுரி வாலிபர்.!
Young man commits suicide by hanging tree in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தர்மபுரி வாலிபர் புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் சிட்ரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மங்குநாத்(34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மங்குநாத் மணமடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் இவர்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்த மங்குனாத் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் மந்திகிரி பகுதியில் கால்நடை பண்ணையில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மந்திகிரி போலீசார் உயிரிழந்த மங்கு நாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மந்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Young man commits suicide by hanging tree in kirishnagiri