#கன்னியாகுமரி || விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கட்டியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ்.இவரது மகன் நிகலன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நிகலன் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாட சென்று கொண்டிருந்தனர்.  விளையாட சென்று கொண்டிருந்த போது அங்குள்ள மதில் சுவற்றில் ஏறியுள்ளனர்.

அவர் மதில் சுவற்றின் மீது ஏறிய போது உயர்மின் அழுத்த கம்பி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சிய பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Boy Death in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal