நேற்று எச்சரிக்கை.. இன்று பறிமுதல்.. கெத்து காட்டும் மாநகராட்சி!
Yesterday warning today confiscation the municipality showing off
தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் மாநகராட்சி மேயர் ஜெகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பேசினார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் உத்தரவின் பெயரில் மேற்கு மண்டல உதவியாளர் பாலமுருகன் மேற்பார்வையில் மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரக் குழுவினர் ஜெயராஜ் ரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபை பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த இடத்துக்குச் சென்ற மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரத் துறையினர் மாநகராட்சி வாகன காப்பகம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட11/2 டன் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் கேரிபை டீ கப் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கு மண்டல அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது .
அங்கு வைத்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மேற்கும் மண்டல உதவி ஆணையர் பாலமுருகன் பார்வையிட்டு போன்ற டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியை பாராட்டி பொன்னாடை அணிவித்தார் உதவி ஆணையர் பாலமுருகன். நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து கேரினப தவிர்க்க வேண்டும் என்று கூறிய 24 மணி நேரத்தில் அதிரடியாக மாநகராட்சி அதிகாரிகள் கெத்து காட்டி 1.5 டன் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது அரசு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பிளாஸ்டிக் டீ கப் டம்ளர் கேரி பை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது குடோன்களில் தேக்கி வைப்பது இந்த செய்யப்பட்ட சட்டவிரோதமான செயலாகும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் மேலும் இதில் தொடர்புடையது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பெயரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபதாரத் தொகை வசூலிக்கப்படும் என்று உதவி ஆணையர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். மேற்கு மண்டலம் முழுவதும் எந்த ஒரு பகுதியிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பை பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்டவர்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
English Summary
Yesterday warning today confiscation the municipality showing off