ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் பாதிப்பு! செயற்கை சுவாசம், தீவிர சிகிச்சை! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்எல்ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.

கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இரு தினங்களுக்கு முன்  XBB வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நலம் சரியாகி வந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

XBB Corona EVKS Elangovan dmk 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->