உலக மலேரியா தினம்.. உறுதி மொழி எடுத்துக்கொண்ட வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலர்கள்!
World Malaria Day Walajapet Municipal Corporation officials take oath
மலேரியா இல்லாத உலகத்தை ஏற்படுத்திட அதற்கான ஒழிப்பு நடவடிக்கை துரிதப் படுத்த வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலர்கள், களப்பணியாளர்கள் மலேரியா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் , உயிருக்கு ஆபத்தான இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்தி அதனை முழுவதுமாக ஒழிக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் வருடம் தோறும் ஏப்ரல் 25ஆம் ஆண்டு உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்தவகையில் இன்று உலகம் முழுவதும் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.பல்வேறு அமைப்புகள் சார்பில் மலேரியா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.அதன் ஒரு பகுதியாக
வாலாஜா நகராட்சியில் மலேரியா தின உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் உத்தரையின்படி அலுவலகம் முன்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை உலக மலேரியா தினம் மலேரியா இல்லாத உலகத்தை ஏற்படுத்திட அதற்கான ஒழிப்பு நடவடிக்கை துரிதப் படுத்துதல் மேலாளர் பொறுப்பு அவர்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள், களப்பணி உதவியாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அலுவலக உதவியாளர்கள், SBM 2.O பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உலகம் மலேரியா தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.
English Summary
World Malaria Day Walajapet Municipal Corporation officials take oath