முகம் பளபளப்பாக பப்பாளி பழத்தை இப்படி ட்ரை பண்ணுங்க...! ரிசல்ட் சூப்பரா இருக்கும்...! 
                                    
                                    
                                   Try papaya for a glowing face...! The results will be great
 
                                 
                               
                                
                                      
                                            வசிகரிக்கும் அழகு பெற:
பப்பாளி பழ சாறை, முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்க:
பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
சருமம் இளமையுடன் காட்சியளிக்க:
மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

கை விரல்கள் மிருதுவாக:
பப்பாளி பழக் கூழை அன்னாசி பழச் சாறுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். முட்டையின் மஞ்சள் கருவை வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன்சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள்.இதனை பப்பாளி கூழுடன் கலந்து உங்கள் கை விரல்களை அதில் அரைமணி நேரம் ஊற விடவும். இடையே நகக் கண்களை மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் நகம், மற்றும் கை விரல்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மிளரும்.
இறந்த செல்களை நீக்க:
பப்பாளி இறந்த செல்களை நீக்க மிகவும் சிறந்தது. தோலுக்கு நிறத்தை தரக்கூடியது. பப்பாளி பேஸ்ட்டை நெற்றியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
சருமம் புத்துணர்வாக:
ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.
இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.
சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும்.
முகம் பளிச்சிட:
பப்பாளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தேய்த்து ஊற வைத்து நீரில் அலசினால், சருமத்தில் வெயிலின் தாக்கத்தினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.
                                     
                                 
                   
                       English Summary
                       Try papaya for a glowing face...! The results will be great