வாவ்! ஓட்ஸ் வைத்து இப்படியும் அழகாகலாமா...?
Can you make oatmeal look this good
வெண் புள்ளி மறைய:
ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

முகம் பொலிவு பெற:
ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
சருமத்தின் நிறம் மாற:
ஓட்ஸ் - 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்கு மிக்ஸ்பண்ணி முகம் மற்றும் கழுத்து பகுதியில் நல்ல ஸ்கரப் செய்ய வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் சருமத்தின் நிறம் மாறி முகம் வெள்ளையாகும்.
உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்க:
ஓட்ஸ் - 1 ஸ்பூன், தேன் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன், ஓட்ஸ் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே மாதத்தில் உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்கி, மீண்டும் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
முகம் பிரகாசமாக:
ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
English Summary
Can you make oatmeal look this good