எலான் மஸ்க் செயலால் அதிர்ந்து போன ஈரான்; தடையை மீறி இணைய சேவை..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த மூன்று நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஈரானில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு ஸ்டார்லிங்கின் இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளமை ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈரானின் ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்துகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், தங்களின் முழு ராணுவ பலத்தின் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்  ஈரானை எச்சரித்துள்ளார்.

இந்த சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஈரான் அரசு குறித்து சமூக வலதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, அந்நாட்டில் இணைய சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலைமை சீரடையும் போது, மீண்டும் இணைய சேவை வழங்கப்படும் என்று ஈரான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானில் அரசின் தடையை மீறி இணைய சேவையை வழங்கும் விதமாக, தொழிலதிபர் எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, சாட்டிலைட் மூலம் வழங்கப்படும் இந்த இணைய சேவையை அரசின் தடையை மீறி ஈரான் நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும் என்பதால் எலான் மஸ்க்கின் இந்த செயலால் ஈரான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்கியதன் மூலம், ஈரானின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை எலான் மஸ்க் அடித்து விட்டார் என்று எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, ஈரானில் ஸ்டார்லிங் சேவை தொடங்கியது என்று அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran shocked by Elon Musks action to provide internet service in defiance of ban


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->