மகளிர் உரிமைத் தொகை: சூப்பர் அப்டேட் கொடுத்த உதயநிதி! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். 

விருதுநகர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, ''கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் மேல் முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கு நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் விருதுநகர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். 

அப்போது மேல்முறையீடு மனு அளித்திருந்த மகளீரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்து தெரிவித்த போது அதன் நியாயத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டனர். 

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டுவிடக் என்னும் அடிப்படையில் அரசு அலுவலர்களை பணியாற்றும் படி கேட்டுக் கொண்டோம்'' என தெரிவித்துள்ளார். 

மேல்முறையீட்டு மனு பரிசீலனை செய்து பின்னர் தகுதியானவர்களுக்கு வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women Entitlement Amount Udayanidhi Update


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->