தனக்குத்தானே பிரசவம்... குழந்தையை வீட்டில் புதைத்த கொடூர தாய் - திருச்சியில் பரபரப்பு.!!
women arrested for baby body found in house in trichy
திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-ஜெனினா தம்பதியினர். இவர்களுக்கு ஆன், பெண் என்று மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வடக்கிபட்டி அருகே ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையே ஜெனினாவுக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி ஐந்தாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்த நிலையில் நேற்று ஜெனினா பச்சிளம் பெண் குழந்தையை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அருகாமையில் உள்ள சர்ச்சுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இருப்பினும் ஜெனினாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் மாற்று சாவியை கொண்டு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து வீட்டை சோதனை நடத்தினர். அதில், வீட்டின் குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டி மூடி இருந்ததுடன், அந்தப் புழுவில் இருந்து புழுக்கள் தென்பட்டது.
இதையடுத்து போலீசார் ஜெனினாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 4 குழந்தைகளுக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதாகவும் 5-வதாக பிறந்த இந்த குழந்தைக்கும் தானே பிரசவம் பார்த்ததாகவும் அப்போது குழந்தை இறந்தே பிறந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது கணவர் சுரேஷ் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றதாலும் உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாததால் வீட்டின் உள்ளேயே குழி தோண்டி குழந்தையை புதைத்ததாகவும், தெரிவித்தார்.
பின்னர், போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெனினாவைக் கைது செய்து விசாரணை நடந்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவரும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women arrested for baby body found in house in trichy