காவல் ஆணையர் அலுவலகத்திலேயே விஷம் குடிக்க முயன்ற பெண்...! கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய காவலர்கள்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் நேற்று நடைபெற்றது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (38) என்ற இளம் பெண், மனவேதனையில் திடீரென அலுவலகத்துக்குள் வந்து, மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்த முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இதைக் கவனித்தவுடன் விரைவாக செயல்பட்டு, விஷப் பாட்டிலை பறிமுதல் செய்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த திடீர் சம்பவம் சில நிமிடங்கள் அலுவலகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.பின்னர் நடைபெற்ற விசாரணையில், காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், விரக்தியில் இந்த கடும் முடிவை எடுக்க முயன்றது தெரியவந்தது.

தன்னை ஏமாற்றியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் காவலர்களிடம் கோரிக்கை வைத்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman tried drink poison right police commissioner office police saved her last minute What happened


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->