ஆண்டிமடம் || 4 மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் - இறுதியில் நடந்த திருப்பம்.!
woman sucide after kill four month baby in andimadam
ஆண்டிமடம் || 4 மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் - இறுதியில் நடந்த திருப்பம்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொளஞ்சி-ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த ஆண்டு கொளஞ்சி இறந்து விட்டார்.
அதன் பின்னர், ராஜேஸ்வரி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்றுவிட்டு நிறைமாத கர்ப்பிணியாக ஊருக்கு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து ராஜேஸ்வரிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இருப்பினும், ராஜேஸ்வரிக்கு உறவினர்கள் ஆதரவு இல்லாததால் கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரி தனது குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றுவிட்டு பிறகு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
woman sucide after kill four month baby in andimadam